What is QR Code? | க்யூ ஆர் குறியீடு என்றால் என்ன?
QR Code என்பது Quick Response Code என்பதின் சுருக்கமாகும். QR Code குறியீடு என்பது கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்களின் வரிசைகளை உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகும். இது ஸ்மார்ட் போன், பார் கோட் ரீடர் அல்லது ஸ்கேனர் போன்ற மின்னணு இயந்திரங்களால் படிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள குறியீடு ஆகும்.
Who Made QR Code? | க்யூ ஆர் குறியீடு உருவாக்கியவர் யார்?
QR Code ஆனது ஜப்பான் நாட்டில் டென்சோ வேவ் என்ற வாகன உற்பத்தி நிறுவனத்தின் பொறியாளர் ஹரா மசாஹிரோ(Hara Masahiro) அவர்களால் 1994-களில் உருவாக்கப்பட்டது.Why does the qr code made? | க்யூ ஆர் குறியீடு எதற்க்காக உருவாக்கப்பட்டது?
ஆரம்பகாலத்தில் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த QR Code பரவலாக பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உதாரணமாக ஒருவரின் தொடர்பு விபரத்தை QR Code -ல் உள்ளடக்கி வைத்திருந்து தேவைப்படும் பட்சத்தில் திறன்பேசி(Smartphone) போன்ற மின்னணு கருவிகள் மூலமாக வேறொருவருடன் வேகமாகவும் மிக எளிதாகவும் பரிமாறிக்கொள்ள முடியும்.
உதாரணமாக ஒருவரின் தொடர்பு விபரத்தை QR Code -ல் உள்ளடக்கி வைத்திருந்து தேவைப்படும் பட்சத்தில் திறன்பேசி(Smartphone) போன்ற மின்னணு கருவிகள் மூலமாக வேறொருவருடன் வேகமாகவும் மிக எளிதாகவும் பரிமாறிக்கொள்ள முடியும்.
மேலும் எளிதில் சொல்லவேண்டும் என்றால் நமது ஆதார் கார்டில் QR Code-ஐ அச்சிட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவே மிக அதிகமாக அச்சிடப்பட்ட QR Code பயன்பாட்டாகும்.
நமது நாட்டின் மதிப்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்களின் வெற்றிபெற்றுள்ள கனவுத்திட்டமான டிஜிட்டல் இந்தியா(Digital India) திட்டத்தின் ஒரு அம்சமாக விளங்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் தற்போழுது அணைத்து சாதாரண மக்களாலும் மிக எளிதில் பயன்படுத்தப்பட்டு வரும் UPI (Unified Payments Interface) அதாவது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் QR Code-ஐ மைய்யமாக வைத்தே செயல்படுகின்றது.
How to Make a QR Code? | QR Code-ஐ உருவாக்குவது எப்படி?
நண்பர்களே QR Code உருவாக்குவது மிகவும் எளிதானது. உங்களுடைய முகவரி, மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரி, போன் நம்பர், இரத்த வகை ஆகிய அனைத்து விபரங்களையும் QR Code Generator மூலமாக அதி விரைவில் மிக எளிதில் உருவாக்க முடியும்.
ஏராளமான இலவச இணையதளங்கள் இந்த QR Code Generator வசதியை வழங்குகிறது. இருப்பினும் அதில் நீங்கள் உள்நுழைய Registration செய்ய நேரிடலாம். மேலும் சில இணையதளங்கள் வாயிலாக உருவாக்கப்படும் குறியீடுகள் குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிவிடும்.
நமது Tech Helper Tamil Blog -ல் QR Code Generator -ஐ உங்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளேன், இதை இலவசமாகவும் காலாவதியின்றியும் நீங்கள் பயன்படுத்தலாம். கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான QR Code -ஐ நீங்கள் உருவாக்கலாம்.