ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரிவியூ, விலை - சென்னை, தமிழ்நாடு
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max Specs Review Price in Chennai Tamil Nadu
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max பற்றி ஒரு பார்வை.
ஆப்ப்ளினுடைய உட்சபச்ச Flagship Devices -ன் 5G வரிசையில் வரும் smartphones தான் Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max ஆகியவை. இவை இரண்டுமே A14 Bionic Chip -ன் #Valimai உடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் Triple Lens Cameras, LiDAR Scanners ஆகியவையும் இந்த Smartphone -களில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு model -லுமே Apple iPhone -ன் Traditional Design -ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max Display Features | ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோவின் டிஸ்பிலே
iPhone 12 மற்றும் iPhone 12 mini smartphones -னுடைய தரமுயர்த்தப்பட்ட பதிப்பாக இதை கருதலாம். Apple iPhone 12 Pro -ல் 6.1" OLED Display பொருந்தியுள்ளது. Apple iPhone 12 Pro Max -ல் 6.7" OLED Display பொருந்தியுள்ளது. இது சிறந்த ஒரு பார்வை அனுபவத்தை கண்களுக்கு அளிக்கிறது. இந்த இரண்டு model -லிலுமே Face ID Notch தவிர்த்து edge to edge full screen Super Retina XDR displays இருக்கு. Apple iPhone 12 Pro -வினுடைய screen resolution ஆனது 2532 x 1170 னுடன் 460 ppi (pixels per inch) ஆகும். Apple iPhone 12 Pro Max -னுடைய screen resolution ஆனது 2778 x 1284 னுடன் 458 ppi ஆகும். அது மட்டுமின்றி HDR Support -உடன் 1200 nits Peak Brightness -ம் தருகிறது, இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max -னுடைய Display ஆனது Nano Ceramic Crystals -னால் நிரப்பப்பட்டுள்ளது, இது இதர Smartphone Manufactures பயன்படுத்திவரும் Glass -ஐ விட மிகவும் உறுதியானதாக Apple சொல்கிறது. இந்த Ceramic Shield ஒரு 4x சிறந்த Protection -ஐ Haptic Touch மற்றும் True Color Tone கொண்ட Display -க்கு தருகிறது.
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max LiDAR Scanner | லிடார் ஸ்கேனர் என்றால் என்ன?
Apple iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max -ல் பொருந்தியுள்ள LiDAR Scanner ஒரு தொழில்நுட்பம் ஆகும். LiDAR Scanner என்பது எதிரில் உள்ள பொருட்களில் இருந்து பிரகாசம் பிரதிபலிக்க எவ்வுளவு நேரம் ஆகும் என்பதை அளவிட்டு சுற்றியுள்ளவற்றின் வரைபடத்தை உருவாக்குகிறது. இதை NASA (An American Space Agency like ISRO - Indian Space Research Organisation) Mars Mission -ல் பயன்படுத்த Develop செய்து வருகிறது. Apple iPhone 12 Pro -வில் பொருந்தியுள்ள LiDAR Scanner அதிவேகத்துடன் துல்லியமாகவும் இருப்பதனால் AR Apps -களால் காட்சிகளை ஒரு மழைக்காடுபோல் (Rain Forest) வரைபடத்தை சித்தரிக்க முடியும்.
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max Camera Features | ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மாக்சின் கேமரா அம்சங்கள்
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max -ல் Wide மற்றும் Ultra Wide Camera மூலமாககூட Low Light Photography பண்ண முடியும் என்பதை இந்த Smartphone -ன் சிறப்பாகும். #வலிமை ஆன படங்களை இரவு பகல் வித்தியாசமின்றி எடுக்க முடியும். LiDAR மூலமாக இரவில்கூட மிக தெளிவானதும் depth உள்ளதுமான clarity உள்ள படங்களை எடுக்கமுடியும். Wide Camera -வின் ƒ/1.6 aperture மூலமாக 27% அதிக வெளிச்சத்தை உள்வாங்குவதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் போட்டோ எடுக்க முடியும். புதிய 7 Element Wide Lens இருப்பதால் edge to edge sharpness -ஐ உறுதி செய்கிறது. மேலும் புதிய OIS(Optical Image Stabilisation) ஒரு வினாடிக்கு 5000 adjustments -ஐ செய்கிறது இதன் வாயிலாக துல்லியமான மற்றும் depth உள்ள photos எடுக்க முடிகிறது. மேலும் LiDAR மூலமாக 6x வேகத்தில் குறைந்த வெளிச்சத்திலும் படமெடுக்க உதவுகிறது.Apple iPhone 12 Pro Max Camera Features | ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோவின் கேமரா அம்சங்கள்
மேலும் Apple iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max -ல் Deep Fusion, Smart HDR 3 மற்றும் Dolby Vision recording வசதி உள்ளது.
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max Storage, RAM, Battery Details
Apple iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max ஆகியவற்றின் Storage 128GB, 256GB, 512GB என உள்ளது. 6GB RAM இரண்டிலும் பொருந்தியுள்ளது. Apple iPhone 12 Pro -ன் Battery ஆனது 2815 mAh ஆகும். Apple iPhone 12 Pro Max-ன் battery backup 3687 mAh ஆகும்.
Apple iPhone 12 Pro and iPhone 12 Pro Max Price in Chennai, Tamilnadu | ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ விலை சென்னை, தமிழ்நாடு.
Apple iPhone 12 Pro Max 128GB: ₹1,17,900.00
Apple iPhone 12 Pro Max 256GB: ₹1,29,650.00
Apple iPhone 12 Pro Max 512GB: ₹1,59,900.00
Apple iPhone 12 Pro 128GB: ₹1,09,650.00
Apple iPhone 12 Pro 256GB: ₹1,18,900.00
Apple iPhone 12 Pro 512GB: ₹1,43,900.00