How to Submit a Sitemap to Google search console in Tamil?
தமிழில் பிளாக்கர் Sitemap -ஐ Google search console -ல் சமர்ப்பிப்பது எப்படி?
What is a Google Sitemap ? | கூகிள் தள வரைபடம் என்றால் என்ன?
Google Sitemap என்பது நமது Blog அல்லது Website -ல் உள்ள இடுகைகள், பக்கங்கள், கருத்துக்கள், படங்கள், விடியோக்கள் மற்றும் இவைகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்காக பயன்படுத்தியுள்ள Web links அதாவது URL -களை Google Search Engine போன்ற தேடுபொறிகளால் கண்டறிவதற்காக நாம் சமர்ப்பிக்கும் ஒரு கோப்பாகும்(file). இந்த கோப்பை sitemap.xml file ஆக Search Console -ல் Submit செய்கிறோம்.
Why should you submit a Google Sitemap? | கூகிள் தள வரைபடத்தை ஏன் சமர்ப்பிக்க வேண்டும்?
Google Search Console -ல் Blogger -னுடைய Sitemap -ஐ Submit செய்யவேண்டியதின் அவசியமானது, Search Engine -களில் ஏதேனும் ஒரு விஷயத்தை தேடும்பொழுது, நம்முடைய Blog -ல் உள்ள அந்த விஷயத்தை சார்ந்த போஸ்ட்கள், பக்கங்கள் ஆகியவற்றை தேடுபவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஆகும். அதுமட்டுமின்றி நமது ப்ளோக் அல்லது வெப்சைட்டடை google search results -ல் monitor செய்வதற்கும், அதன்வாயிலாக நமது blog posts -களில் எதை பார்வையிடுகிறார்கள்? அவர்கள் எந்தெந்த சொற்களை அதற்க்காக பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம், சரியான முறையில் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நம் வெளியிட்டுள்ள மற்றும் வெளியிட உள்ள பதிவுகளை மேம்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய வெப்சைட் அல்லது ப்ளோகின் HTML code -ல் உள்ள பிழவுகளையும் (errors) சரிசெய்ய முடியும். நம்முடைய blog posts -னுடைய URL -களில் உள்ள structure error -களையும் கண்டறிந்து சரி செய்ய உதவும். Broken link -களை google search results -ல் இருந்து நீக்க முடியும்.
Google Search Console வாயிலாக இந்த இலவச சேவைகளை பெறுவதற்காக முதலில் நம்முடைய Blogger Blog அல்லது Website -ஐ Google Webmaster Tool -ல் அதாவது இப்போதைய Google Search Console -ல் Verify செய்தக்கவேண்டும். அதன் பிறகு நாம் robots.txt என்ற கோப்பை(file) உருவாக்க(create) வேண்டும், அதன்பிறகு sitemap.xml file -ஐ Google Search Console -ல் சமர்ப்பிக்க வேண்டும்.
Robots txt Generate செய்வதற்காக இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்:
How to Verify Blog or Website in Google Search Console? | Google Search Console -ல் ப்ளோக் அல்லது வெப்சைட்டை verify செய்வது எப்படி?
முதலில் https://search.google.com/search-console என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக கூகிள் செர்ச் கன்சோள் செல்லவும். அதில் உங்களது அக்கௌன்ட் திறக்கவும். அதன்பிறகு Add Property என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் Blog அல்லது Website -னுடைய Web Address -ஐ (URL) submit செய்து verify என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுடைய Blogger Blog அல்லது Website -ஐ Verify செய்து கொள்ளலாம்.
GSC -ல் (Google Search Console) Blogger -ஐ எப்படி Verify செய்வது என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கவும்.
How to Submit Sitemap to Google Search Console? | கூகிள் செர்ச் கன்சோளில் சைட்மேப் சமர்ப்பிப்பது எப்படி?
முதலில், நம்முடைய Blog அல்லது Website -ஐ Google Webmaster Tool அல்லது Google Search Console -ல் Verify செய்த பிறகு, நமது Blogger Blog -னுடைய Dashboard Settings -ல் உள்ள Crawlers and Indexing -ல் robots.txt submit செயதாக வேண்டும். அதன் பிறகு Google -னுடைய Search Console -ல் இடது பக்கத்தில் உள்ள sitemaps என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது நம்முடைய Blogger Custom Domain (URL) https://www.example.com அல்லது Blogspot Sub Domain ஆன https://www.example.blogspot.com -க்கு பிறகு sitemap.xml என்று டைப் செய்ய வேண்டும். அதாவது https://www.example.com/sitemap.xml அல்லது https://www.example.blogspot.com/sitemap.xml என்ற அமைப்பில் இருந்தாக வேண்டும். இப்பொழுது Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும். Sitemap Submitting என்ற தகவலை நம்மால் பார்க்க முடியும். அதன் பிறகு Sitemap submitted successfully என்ற ஒரு Message தென்படும். இப்படி மிக சுலபமாக Sitemap -ஐ Google Search Console -ல் நம்மால் இணைத்துக்கொள்ள முடியும்.
ஒருசில சமயங்களில் Sitemap Couldn't fetch error என்று ஒரு error
தென்படலாம், அந்த Couldn't fetch error எப்படி முழுமையாக fix செய்வதென்று
தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கவும்.
இப்பொழுது நாம் நம்முடைய Website அல்லது Blogger Blog -ல் இருக்கும் அனைத்து வகையிலான Posts, Pages, Videos, Images, PDF மற்றும் Download Links ஆகியவற்றை எளிதில் Search Engine -களால் crawl செய்ய முடியும். மேலும் நாம் வெளியிடும் அனைத்து இருக்கைகளும் Search Engine -களில் எளிதில் தானாகவே Index ஆகிவிடும். இதனால் ஒவ்வொரு Blog Posts வெளியிட்டபிறகும் அதனுடைய URL -களை Manual -ஆக Search Console-ல் Index செய்யவேண்டியதன் அவசியமானதை தவிர்க்க முடியும்.
Conclusion:
இந்த பதிவானது நம்முடைய Blogger -ஐ Google -னுடைய Search Console -ல் மிகவும் சரியான முறையில் எப்படி Submit செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும். Tamil -ல் விளக்கமாக Google -ல் sitemap submit செய்வதை சரியான முறையில் விபரித்துள்ளோம், இதை பயன் படுத்தி பிறர் உதவியின்றி உங்களுடைய Website அல்லது Blog -ஐ Google Webmaster Tool -ல் Submit செய்யலாம்.
Notice:
நம்முடைய Tech Helper Tamil ப்ளோக் வாயிலாக மேலும் ப்ளோகிங் சம்பந்தமான பல்வேறு தகவல்களை வெளியிட உள்ளோம். மேலும் உங்களுடைய மதிப்புக்குரிய Comments மற்றும் வேண்டுகோள்களை நமது Comment Section -ல் பதிவிடுங்கள். மேலும் உங்களது மின் அஞ்சலை நமது ப்ளோகில் உள்ள Follow By Email என்ற அமைப்பு மூலமாக பதிவு செய்து, நமது ப்ளோகில் வெளியிடப்படும் அனைத்து இடுகைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும்.