தமிழில் SEO Friendly -யாக Blog Post Content எழுதுவது எப்படி? | How to Write a SEO Friendly Blog Posts in Tamil?

1. SEO என்றால் என்ன? | What is SEO?
நீங்கள் எழுதும் content மக்களுக்கு சென்றடைய, மக்களால் தேடக்கூடிய மற்றும் எளிதில் Search Engine -ல் Crawl (உலா வருவது ) ஆகவும், அதே நேரத்தில் Index (தரவரிசை) ஆக்கக்கூடியதாகவும் இருக்குமெனில் அதை SEO (Search Engine Optimization) என்று சொல்லப்படுகிறது.
2. Tamil Blog SEO Content தேர்வு செய்தல் | How to choose a SEO Content?
நீங்கள் எதைபற்றி blog post எழுத உள்ளீர்களோ அந்த content மக்களால் தேடக்கூடியதாக இருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் எழுதும் content -ஐ Search Engine -ஆல் எளிதில் தரவரிசை (Index) செய்யக்கூடிய அம்சங்கள் அதிகமாக இருப்பதை உறுதி செய்து தகுந்த Keywords -ஐ பயன்படுத்தினால் அது SEO Content ஆக இருக்கும்.
3. Keyword என்றல் என்ன? | What is Keyword?

Google, Bing, Yahoo போன்ற Search Engine -களில் தேடுவதற்க்காக பயன்படுத்தும் வார்த்தைகளைதான் Keyword என்று சொல்கிறோம். Blog Post -ஐ SEO friendly ஆக Tamil போன்ற மொழியில் எழுதுவதற்க்கும்(write) Keyword பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
உதாரணமாக:
உங்களுடைய blog post -ல் நீங்கள் எதைப்பற்றி குறிப்பிடுகிறீர்களோ அந்த கருத்தை தேடுவதற்காக மக்கள் எந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களோ அதை Keyword என்று சொல்லப்படுகிறது.
4. Blog Post வடிவமைத்தல் (Structure the Post)
நீங்கள் எழுதும் blog post content-ஐ முறையாக வடிவமைப்பது SEO friendly -க்கு மிகவும் அவசியம். உங்களுடைய ஒவ்வொரு Article -ம்(கட்டுரை) குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளைகொண்டிருக்க வேண்டும். அதே சமயத்தில் அது படிப்பவர்களுக்கு எளிதில் புரியத்தக்கதாக இருக்க வேண்டும். அதற்காக முறையான வடிவமைத்தல் மிகவும் அவசியம் இல்லெயெனில் வாசகர்கள் நீடிக்கமாட்டார்கள். எனவே நீங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை வரிசை படுத்தி, அதில் உள்ள Keywords -ஐ பயன்படுத்தி பத்திகள் (Paragraphs) அமைத்து எளிதில் Search Engine Optimization (SEO) ஆகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக உங்களுடைய Blog Post SEO Friendly ஆகிவிடும். இதனால் வாசகர்கள் தேடும்பொழுது எளிதாக உங்களுடைய Blog Post -ஐ Search Engine -கள் வெளியிடும், இதன் மூலம் உங்களுடைய ப்ளோகிற்கு Organic Traffic -ஐ பெறமுடியும்.
5. Paragraph Dividing (பத்தி வகுத்தல்)
உங்களுடைய இடுக்கை (Blog Post) நீளமாக அல்லது பல்வேறு கருத்துக்களை ஒன்றாக வெளியிடுவதெனில் கண்டிப்பாக Paragraph Division செய்திருக்க வேண்டும். இல்லெயெனில் வாசகர்களுக்கு குழப்பம் நேரிடலாம், அதுமட்டுமின்றி SEO Friendly -யாக எழுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். சொல்லவரும் தகவல்களின் அடிப்படையில் உகந்த Headings (தலைப்புகளை) நல்கி Paragraph Divide செய்யலாம்.6. SEO friendly Blog Post Headings (Title) பயன்படுத்துதல்
Headings பயன்படுத்துவதால் உங்களுடைய Tamil Blog Post SEO Friendly ஆவது மட்டுமல்லாமல் Readers Friendly (வாசகர்களுக்கு ப்ரியமுள்ளதாக) ஆகவும் இருக்கும். பொதுவாக H1, H2, H3, H4, H5, மற்றும் H6 Title கள் உள்ளன. உங்களுடைய ப்ளோக் போஸ்டில் கண்டிப்பாக H1, அல்லது H2 Tag -ஐ பயன்படுத்தியிருக்க வேண்டும். இது உங்கள் பதிவை எளிதில் Search Engine -ல் Index ஆவதற்கும் அதன் மூலமாக உங்களுடைய Blog Post Search Engine -ல் Rank ஆகி Organic Traffic Increase ஆக உதவும். உங்களுடைய தலைப்புகளில் கண்டிப்பாக உங்களுடைய Keywords -ஐ உள்ளடக்கியிருக்க வேண்டும். Long Term Keywords பயன்படுத்தி Title அமைப்பதும் LSI Keywords பயன்படுத்தி Sub Title -கள் அமைப்பதும் Blog Post எளிதில் Search Engine Optimize ஆக உதவும்.
7. LSI Keywords என்றல் என்ன?
LSI Keywords என்பது உங்களுடைய Content உதாரணமாக Restaurant-ஐ பற்றி என்றால் Menu -ல் இருக்கும் தோசை, இடலி, பொங்கல், சட்னி, சாம்பார் போன்றவைகளை(நகைச் சுவைவைக்காக இந்த உதாரணம் சேர்த்துள்ளேன் மன்னிக்கவும்) LSI Keywords என்று சொல்லலாம். அதாவது உங்களுடைய Main Keyword -இன் பல்வேறு அம்சங்களை LSI Keywords என்று சொல்லலாம்.8. Article Length (கட்டுரையின் நீளம்)
நீண்ட Article எழுதுவதால் வாசகர்களுக்கு சொல்லவரும் விஷயங்களை சரியாக புரிய வைப்பது மட்டுமின்றி அது Google Search Engine -ல் உங்களுடைய பதிவை Rank செய்வதற்கும் உதவும். மேலும் உங்களுடைய article length குறைந்தபட்சம் 500 - 1000 வார்த்தைகளை கொண்டிருப்பது SEO Friendly -ஆக blog posts content எழுதுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. உங்களுடைய Keyword பயன்பாடு முழுக்க முழுக்க Article Length -ஐ சார்ந்திருக்க வேண்டும். Keyword பயன்பாடு 1% அல்லது 2% ஆக இருக்கவேண்டும். Keyword பயன்பாட்டை 2% -த்திற்கும் மேலாக அதிகப்படுத்தினால் அதை Spam ஆக கருதப்படும். இந்த விகிதம் முறையாக பின்பற்றினால் உங்களுடைய Blog Post Rank ஆகி Search Engine -ல் இருந்து Organic Traffic கிடைக்கக்கூடும்.9. Link Back செய்வதின் அவசியம்.

உங்களுடைய பதிவில் உங்கள் Blog -ல் உள்ள வேறு Post -களின் Link -ஐ தகுந்த வார்த்தைகளுடன் அல்லது You may also like போன்ற தலைப்பில் இணைப்பதன் மூலம் வாசகர்களை உங்களுடைய ப்ளோகில் தக்கவைத்து Bounce Rate தக்கவைப்பது மட்டுமின்றி ப்ளோகில் இருக்கும் வேறு Post -களுக்கும் Internal Traffic உருவாக்க முடியும். இது உங்களுக்கு Search Engine Rank Position (SERP) அதிகரிக்க உதவும். SEO Friendly -யாக Blog Post Content எழுதுவதில் Link Back முக்கியமான பங்கு வகிக்கிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் போட்டிருக்கும் ப்ளோக் போஸ்டிற்கு பொருத்தமான போஸ்டினுடைய Link -ஐ மட்டும்தான் இணைத்திருக்க வேண்டும்.