Register . XYZ Domain in just ₹85 Register Now Web Hosting Starts ₹19/mo

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed], Successful way to fix Couldn't Fetch Error, Proper way to fix sitemap error

Blogger -ல் Couldn't Fetch Error-ஐ எப்படி 100% சரி செய்வது | How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]

 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed] 

இந்த பதிவை வெளியிட காரணம்.

இந்த பதிவு Blogger -ல் Couldn't fetch Error -ஐ 100% சரிசெய்வதற்கு கண்டிப்பாக உதவும். இந்த பதிவை நான் Tamil -ல் வெளியிட முக்கிய காரணம் என்னவென்றால், இந்த Sitemap Error -னால் நான் என்னுடைய Blogger -ல் உள்ள ஏராளமான Blog Post -களை Google Search Console -ல் Sitemap.xml மூலமாக Submit செய்யும்பொழுது இந்த சிக்கல் ஏற்பட்டது. அதை சரி செய்வதறக்காக YouTube -ல் உள்ள 100-ற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் உள்ள விடீயோக்களை பார்த்தேன். அவர்க சொன்ன விதிமுறைகளை பின்பற்றி இந்த சிக்கலை சரிசெய்ய முயன்றேன் அனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது. இந்த பதிவை படிக்கும் நீங்களும் அதை உணர்ந்திருப்பீர்கள். அதற்கு காரணம் என்னவென்றால் YouTube -ல் நாம் பார்க்கும் பல வீடியோக்களும் பிற விடியோக்களின் அம்சங்களை அப்படியே பதிவு செய்வதுதான். யாரும் அதை ஆராய்ந்து செய்வதில்லை. நாம் பார்க்கும் விடியோக்கள் அனைத்தும் Editing செய்து வெளியிடுவதால் நம்மால் அதிலிருக்கும் உண்மைத்தன்மையை உணரமுடியாது.
 
என்னைப்போன்று பலரும் அந்த விடீயோக்களை பார்த்துகொண்டு  நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு சிரமத்திற்கும் உள்ளாவுகின்றனர். எனவே என்னைபோன்று  அவற்றால் சிரமத்திற்கு உள்ளானவர்களுக்காகவும் புதிதாக Blogger -ல் Blog -ஐ ஆரம்பித்து Sitemap Submit செய்ய உள்ள அனைவருக்காகவும் இந்த பதிவை நான் சமர்ப்பிக்கிறேன்.
 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]

Sitemap " Couldn't fetch " Error  ஏற்பட காரணம்.

நாம் நம்முடைய பிளாக்கர் ப்ளோகின் Sitemap -ஐ Google Search Console -ல் பதிவு செய்யும் பொழுது பலருக்கும் " Couldn't fetch " என்ற ஒரு error ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பதிவிடுகிறேன்.
 

புதிய ப்ளோகில் Sitemap Error வர காரணம்.

நம்மில் பலரும் Blogger Blog -ல்  Theme Customization, Title (ப்ளோகின் பெயர்), Description (ப்ளோகைப்பற்றிய சிறிய விபரம்), Meta Tags அதாவது Keywords, Custom Robots.txt ஆகிய எல்லா அம்சங்களையும் முறையாக செய்தபிறகு Search Console -ல் Site Verification செய்வோம். இதை செய்து முடித்தவுடன் Sitemap.xml மூலமாக Sitemap -ஐ Submit செய்வோம் அப்பொழுது உடனே Couldn't fetch என்ற error வந்துவிடும். இதற்க்கு காரணம் மிகவும் எளிதானது. ஆனால் நாம் உடனே துன்பத்திற்குள்ளாகி YouTube -ல் தேட ஆரம்பிப்போம். அதற்க்கு முக்கிய காரணம், இந்த Blogger -ஐ பற்றி பலருக்கும் தெரிய வந்ததற்க்கு மூலகாரணம் YouTube என்பதனாலாகும். பல்வேறு விடீயோக்களை பார்த்து அதுபோன்று பல technique -களும் செய்துபார்ப்போம். அதில் சில்சருக்கு வெற்றியும் பலருக்கு தோல்வியும் கிடைக்கும். இதை நான் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்ததில் ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது நாம் புதிதாக ப்ளோக் ஆரம்பித்து எந்த ஒரு Blog Post -யும் அதில் Publish செய்யாமல் Sitemap -ஐ Submit செய்வதனால்தான் இந்த error வருவதற்கு காரணமாகும் என்பதாகும். குறைந்தது ஒன்றோ இரண்டோ பதிவுகளை உங்களது blogger -ல் வெளியிட்டபின்னரே Sitemap -ஐ Submit செய்யுங்கள். இது செய்வதன் மூலம் நீங்கள் புதிதாக ஆரம்பித்துள்ள உங்களது Blogger Blog -ல் Couldn't fetch என்ற error வருவதை தவிர்க்க உதவும்.
 

நிலுவையிலிருக்கும் Blogger -ல் Sitemap Couldn't fetch Error வர காரணங்கள்.

இதற்கு பல்வேறு வகையிலான காரணங்கள் இருக்கிறது. அவையில் சிலவற்றை இங்கு விளக்குகிறேன். முதலில் நம்முடைய Blogger  -ல் Sitemap இணைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று பார்ப்போம்.

Sitemap Submit செய்யவேண்டியது அவசியமா? | Is it Necessary to Submit a Sitemap?

இந்த கேள்விக்கு பதிலானது இரண்டு வகையில் உள்ளது. அது உங்களுடைய ப்ளோகின் தன்மையை சார்ந்திருக்கிறது.
 
முதலாவதாக உங்களுடைய ப்ளோகில் 100 -ற்கும் குறைவாக Blog Posts உள்ளதென்றால் நீங்கள் Sitemap Submit செய்யவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் ப்ளோகின் Posts, Pages -ஐ அல்லது உங்கள் Homepage URL -ஐ மட்டும் Request Indexing மூலம் Google Search Console -ல் நேரடியாக பதிவிடலாம். இது உங்கள் ப்ளோகை வேகமாக Search Engine -ல் Crawl ஆவதற்கு உதவும். ஆனால் உங்களுடைய blogger -ல் Images, Videos மற்றும் Download URL -கள் ஆகியவற்றை பதிவிட்டிருந்தால் கண்டிப்பக்க Sitemap -னை நீங்கள் Submit செய்திருக்க வேண்டும்.
 
இரண்டாவது நிலையில் உங்களுடைய ப்ளோகில் 100 -ற்கும் மேலாக பதிவுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை Request Indexing மூலமாக பதிவேற்றம் செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த சூழலில் நீங்கள் கட்டாயமாக Sitemap Submit -ஐ செய்வைதன் மூலம் Index செய்வதே சரியான தீர்வாக இருக்கும்.
 

Couldn't fetch Error வர காரணங்கள்

1. Duplicate URL

உங்களுடைய ப்ளோகில் ஒரு Page -ஐ அல்லது Post -ஐ அடைவதற்காக பல்வேறு URL -கள் இருக்குமெனில், அல்லது ஒரே Content இருக்கும் வகையில்(சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும்) பல்வேறு Pages, Posts இருந்தால் அதில் ஒன்றை மட்டும்தான் Google எடுத்துக்கொள்ளும். (உதாரணமாக: Mobile மற்றும் Desktop Version -களில் பதிவுகள் இருப்பது) மற்றவற்றை Google -ஆல் தேர்வு செய்யப்படாத பட்சத்தில் இந்த error உருவாகும்.

2. URL Structure (URL -ன் வடிவம்)

அதாவது நீங்கள் Google Search Console -ல் உங்களுடைய Blog -ஐ http://example.com என்றுதான் பதிவிட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுடய Blogger -ல் வெளியிட்டுள்ள Blog Post -களின் URL https://example.com என்றோ அல்லது http://m.example.com என்றிருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக Couldn't fetch என்ற error வரும்.
 

எப்படி Couldn't fetch Error -ஐ சரிசெய்வது? | How to Solve Couldn't fetch Error in Google Search Console?

இந்த Sitemap Error ஆனது உருவாக முக்கியமான காரணமே நாம் நம்முடைய Blogger -ஐ Search Console -ல் Verify செய்திருந்தாலும் முறையான Format -ல் URL அல்லது நமது Domain -ஐ செலுத்தவில்லை (Index செய்யவில்லை) என்பதாகும். அதாவது எந்த Format -ல் பதிவிட்டோமோ அதே Format -ல் தான் Sitemap Submit செய்தாக வேண்டும். உதாரணமாக: http://example.com என்று நீங்கள் பதிவிட்டிருந்தால் http://example.com/sitemap.xml என்ற format -ல் தான் Sitemap Submit செய்ய வேண்டும். உங்களுடைய Blog ஆனது http://www.example.com/ இருக்குமெனில், கண்டிப்பாக உங்கள் Blogger -ஐ Search Console -ல் இணைக்கும்பொழுது http://www.example.com/ இந்த வடிவத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் www என்பதை தவிர்த்து http://example.com/ என்ற format -ல் பதிவிட்டு Sitemap Submit செய்யுமானால் அது http://example.com/sitemap.xml இப்படி இருக்கும். இதனால் error கண்டிப்பாக வரும். ஏனென்றால் அதில் www என்பது குறிப்பிடவில்லை அதனால் error உருவாகும். இந்த நிலையில் உங்கள் URL http://www.example.com/sitemap.xml என்ற வடிவத்தில் இருந்தால் மட்டும்தான் Google Search Engine -ஆல் Crawl செய்ய முடியும்.
 

இந்த Sitemap Couldn't Fetch Error -ஐ 100% Fix செய்யலாம்.

முதலில் நீங்கள் இணைத்துள்ள URL -ஐ (உங்கள் Domain -ஐ) Request Indexing மூலமாக Google Search Console -ல் Index செய்து URL Inspection Tool -ஐ பயன்படுத்துதி Test Live URL செய்யவும். அப்போது URL is on Google என்ற மெஸேஜை பார்க்கமுடியும். இதன்பிறகு Sitemap Submit செய்தால் 100% Couldn't Fetch Error Fix ஆகிவிடும்.

இந்த Screenshots -ஐ  பின்பற்றி கீழ் கொடுத்துள்ள விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி முயற்சிக்கவும் வெற்றி நிச்சயம் .

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
1. முதலில் உங்களுடைய Domain -ஐ Google Search Console -ல் Verify செய்யவும்.
 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
2. Verify ஆவதற்கு சிறிது கால தாமதம் நேரிடலாம்.

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
3. Sitemap -ஐ நீங்கள் உங்களுடைய Blogger -ல் Blog Post Publish செய்யாமல் Sitemap Submit செய்யுமானால் " Couldn't fetch " என்ற Error கண்டிப்பாக தென்படும். எனவே உங்களுடைய Blogger -ல் குறைந்தபட்சம் ஒரு Blog Post ஆவது வெளியிடுங்கள். அதன்பிறகு முயற்சிக்கவும். Blog Post Publish செய்த பிறகும் Error தென்படுமானால் கீழிருக்கும் Screenshot -களின் அடிப்படையில் விதிமுறைகளை பின்பற்றவும்.

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
4. இங்கு நீங்கள் கவுனிக்க வேண்டிய விஷயம் எந்த Format -ல் நீங்கள் URL -ஐ  Verify செய்தீர்களோ அதே Format -ல் URL Inspection -ஐ  மேற்கொள்ளவேண்டும்.
 
உதாரணமாக: நீங்கள் Google Search Console -ல் உங்கள் Domain -ஐ Verify செய்வதற்கு http://www.example.com/ என்ற Format -ஐ பயன்படுத்தினீர்கள் என்றால் அதே வடிவத்திலேயே URL Inspection -ஐ  மேற்கொள்ளவேண்டும். 
 
ஒருவேளை நீங்கள் Domain -ஐ Verify செய்வதற்கு https://www.example.com/ என்ற Format -ஐ பயன்படுத்தினீர்கள் என்றால் https://www.example.com/ இந்த வடிவத்திலேயே URL Inspection -ஐ  மேற்கொண்டாக வேண்டும்.
 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]

 
5. இப்பொழுது URL is not on Google என்ற தகவலை பார்ப்பீர்கள். அதில் உள்ள Request Indexing என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
6.  Indexing Requested என்ற Message தென்படும். அதில் உள்ள Got it என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
7. Test Live URL என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் Domain Google -ல் Index ஆகியிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
8. நான் குறிப்பிட்ட "4 -வது" விதிமுறையை பின்பற்றித்தான் நீங்கள் URL Inspection -ஐ மேற்கொண்டிருந்ததென்றால் கண்டிப்பாக " URL is Available to Google " என்ற Message -ஐ காண்பீர்கள்.

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
9. இப்பொழுது sitemap.xml என்று type செய்து Sitemap -ஐ Submit செய்யவும்.

How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]
 
10. இப்பொழுது Sitemap Submitted Successfully என்ற Message -ஐ காண்பீர்கள்.
 
How to Fix Sitemap Couldn't Fetch Error in Blogger Tamil [100% Fixed]

நீங்கள் இந்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி முயற்சிக்கும் பட்சத்தில் உங்களுடைய Blogger -ஐ Google Search Console -ல் இணைத்து Sitemap Submit செய்யும்பொழுது ஏற்படும் Sitemap Couldn't Fetch Error -ஐ 100% Fix செய்யலாம்.

Conclusion

இந்த பதிவானது Tamil -ல் Couldn't Fetch Error -ஐ 100% Fix செய்ய உதவும். இதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி நீங்களும் உங்கள் Blogger ப்ளோகினுடைய Sitemap Couldn't Fetch Error -ஐ Google Search Console -ல் முழுமையாக 100% Solved என்ற இலக்கை அடையலாம்.

Getting Info...

About the Author

Me, Ranjith - Since 2008 working as a Cinematographer and Video Editor. I have completed Master in Multimedia System Engineering. I'm interested in Blogging.

Buy me a coffee

1 comment

  1. விரிவான மிக தெளிவான விளக்கம். நன்றி !!
Spam links are Strictly Prohibited.

Ad Placement

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.