How to Create and Add SEO Meta Tag for Blogger in Tamil
தமிழில் எப்படி SEO Meta Tag Create செய்து Blogger -ல் Add செய்வது?
நண்பர்களே! நம்முடைய இந்த Tamil ப்ளோக் போஸ்டில் meta tags create செய்து blogger -ல் add செய்வது மட்டுமின்றி, மெட்டா டேக்ஸ் என்றால் என்ன? அதனுடைய தேவைகள் என்ன? எந்தெந்த வகையிலான மெட்டா டேக்ஸ் பயன்பாட்டில் உள்ளன? இந்த மெட்டா டேக்ஸ் நாம் பயன்படுத்துவதால் அது எவ்வாறு SEO Ranking -ற்கு நமக்கு உதவுகின்றன? ஆகிய பல்வேறு விஷயங்களை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்த உதவும்.
What Are Meta Tags? | மெட்டா டேக்ஸ் என்றால் என்ன?
Meta Tags என்பது ஒரு snippet ஆகும். ஸ்னிப்பெட் என்றால் நம்முடைய blog அல்லது website -ல் உள்ள ஒட்டுமொத்த கருத்துக்களையும் சுருக்கமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள "metadata" ஆகும். இந்த snippet அதாவது meta tag -ஐ நம்முடைய web page -ல் நேரடியாக பார்க்கமுடியாது. ஆனால் இது ஒரு source code -னுடைய வடிவத்தில் Search Engine -களால் எளிதில் கண்டறிவதற்காக நம்முடைய blogger -னுடைய HTML Document -ல் உள்ளடங்கியிருக்கும்.
Snippet மூலமாக நமது ப்ளோகில், நாம் வெளியிட உள்ள இந்த metadata -வை நம்மால் நேரடியாக ப்ளோகில் பார்க்கமுடியாது என்றாலும், இந்த meta tag -ஐ பயன்படுத்தி தான் Google, Bing, Yandex, Yahoo ஆகிய Search Engine -கள் மற்றும் web crawlers நமது blogger அல்லது website -ல் உள்ள ப்ளோக் போஸ்டுகளில் உள்ள தகவல்களை search result -களில் வெளியிடுவதும், அந்த தகவல்களை SERP -ல் rank செய்கிறதும்.
நாம் தேடுபொறிகளில் தேடும்பொழுது வெளியிடப்படுகின்ற result -களில் heading -ற்கு கீழே தெரியவரும் description ஆகவோ, அல்லது அந்த search description -களில் உள்ளடங்கி இருக்கும் வார்தைகளாகவோ இந்த meta tags ஆனது இருக்கும்.
இந்த metadata என்கிற snippet நம்முடைய website அல்லது blogger -னுடைய HTML Document -ன் Head பகுதியில் இருக்கும். நமது blogger -னுடைய head பகுதியில் Add செய்யப்பட்டிருக்கும் இந்த meta tag -களை search engine -களால் எளிதில் கண்டறிய முடியும். அதன் வாயிலாக நம்முடைய ப்ளோகில் உள்ள அம்சங்களை search engine -களில் robots -களான Googlebot, Bingbot, Yahoobot ஆகியவற்றால் எளிதில் index செய்யவும் crawl செய்யவும் முடியும்.
Types of Meta Tag for Blogger | ப்ளோகருக்கான மெட்டா டேக் வகைகள்
1. Title Tag | டைட்டில் டேக்
<tilte>Title</title>
டைட்டில் டேக் என்பது ஒரு முதல் HTML Element -ஆக உங்களுடைய Blogger -ஐ தேடுபொறிகளில் தேடுபவர்களுக்கு குறிப்பிட்டு காட்டுவதற்கு உதவுகிறது. இந்த title tag -ன் பயன்பாட்டால் Chrome, Mozilla Firefox, Microsoft Edge, Internet Explorer, Safari, Opera ஆகிய அனைத்து browser -களிலும் உங்களது blog அல்லது website -ஐ support செய்ய, அதாவது காண்பிப்பதற்கு ஏற்றவாறாக மாற்ற உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் SEO ranking -ற்கு Title Tag என்பது மிகவும் அவசியமானது. உங்களது blogger -னுடைய ஒட்டுமொத்த அம்சங்களை பிரதிபலிப்பிக்கும் விதமாக Title இருக்கவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், Title Tag என்பது உங்களுடைய Landing Page -ற்கு Organic Traffic -ஐ பெற்றுத்தர உதவுகிறது. Social Media Sharing -ற்கும் இந்த டைட்டில் டேகினுடைய பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே உங்களது ப்ளோகிற்கு Tilte அதாவது ப்ளோகினுடைய பெயர் சூட்டும் பொழுது கவனத்துடன் கையாள வேண்டும். இந்த டைட்டில் என்பது 55 வார்த்தைகளுக்கு குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. Description Tag | டிஸ்க்ரிப்ஷன் டேக்
< Meta Name = "Description"
Meta Description Tag என்ற HTML Element ஆனது search result -களில் உங்களுடைய தலைப்புக்கு கீழே உங்களுடைய Blog Post -னுடைய கருத்தை ஒரு சிறு விளக்கமாக காண்பிக்க உதவுகிறது. இந்த meta description ஆனது உங்கள் web page -னுடைய அம்சங்களை search engine -களுக்கு தெரியவைக்க உதவுகின்றது. Google இந்த Description -ஐ Ranking -ற்காக பயன்படுத்த விட்டாலும், அது உங்கள் blogger -னுடைய CTR -ன் மீது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. இது search result -களில் தொடர்ந்து உங்களது Blog அல்லது Site -ஐ முதன்மைப்படுத்த உதவும்.
நீங்கள் சரியான முறையில் Description -ஐ எழுதியிருக்கும் பட்சத்தில், அது ஒரு சிறு விளம்பரம் (Ad) என்ற முறையில் ஒரு Call to Action ஆகவும் இருந்து உங்கள் ப்ளோகிர்க்கு கூடுதல் click -களை பெற்றுத்தர உதவும். அது செரப் -ல் ப்ளோகினுடைய ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட உதவுகின்றன. தேடுபொறிகளில் தேட உபயோகப்படுத்தும் Keywords -ன் அடிப்படையில் தேடல் முடிவுகளில் வெளியிடப்படும் Description ஆனது மாறுபடும்.
3. Robots Tag | ரோபோட்ஸ் டேக்
< Meta Name = "Robots"
Robots Tag என்பது மிகவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனென்றால் நமது blog அல்லது website -ல் உள்ள ஒரு webpage ஆக இருந்தாலும் அல்லது ஒட்டுமொத்த pages, posts ஆக இருந்தாலும் அதில், search engine -களின் spider களால் index செய்வதற்கு எதையெல்லாம் அனுமதிக்க வேண்டும் என்று இந்த Robots Tag -ஐ பயன்படுத்தி நம்மால் முடிவு செய்ய முடியும். மேலும் ஒருசில குறிப்பிட்ட search engine-களை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து நமது blogger அல்லது website -ஐ நம்மால் Hide செய்ய முடியும்.
உதாரணமாக சொன்னால் Baidu, Qihoo360 போன்ற சைனீஸ் தேடுபொறிகள் நமது ப்ளோகை index செய்வதை அவற்றின் robots -ன் பெயரை பயன்படுத்தி அனுமதி மறுக்க முடியும்.
robots.txt create செய்வதன் மூலமாக இது நமக்கு சாத்தியமாகிறது. robots.txt எப்படி உருவாக்குவதென்று தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கவும்.
How to Create a Sitemap Robots txt for Your Blogger Blog in Tamil?
4. Author Tag | எழுத்தாளர் டேக்
< Meta Name = "Author"
இது ப்ளோகினுடைய உரிமத்தை அல்லது அதில் வெளியிடும் கருத்துக்களின் உத்தரவாதத்தை யார் வகிக்கிறதோ அவரது பெயரை குறிப்பிட உள்ள பகுதி ஆகும்.
5. Contact Tag | கான்டாக்ட் டேக்
< Meta Name = "Contact"
இது உத்தரவாதப்பட்ட நபரின் மின்னஞ்சலை (email) குறிப்பிடுவதற்ககும்.
6. Distribution Tag | டிஸ்ட்ரிபியூஷன் டேக்
< Meta Name = "Distribution"
இது உங்கள் ப்ளோகின் விநியோக நிலை மற்றும் அளவை நிர்ணயிக்கிறது. இந்த மெட்டா டேகை பயன்படுத்தி ப்ளோக் மூலமாக வெளியிடும் போஸ்டுகள் எந்த பகுதியில் வெளியிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய உதவுகிறது.
இதை பொதுவாக மூன்று வகைப்படுத்தி உள்ளது.
- Global - இது உலகளாவிய அளவில் பார்வையாளர்களுக்கு உங்கள் பிளாகை காண்பிக்கிறது.
- Local - இது உள்ளூர் பயனாளர்களுக்காக மட்டும் ஒதுக்குகிறது.
- IU - இது உள் பயன்பாட்டிற்க்காக அதாவது பொது பார்வையாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது.
7. Meta Tag Revisit - After | மெட்டா டேக் ரீவிசிட் - ஆப்ட்டர் டேக்
< Meta Name = "Revisit-After"
இந்த Revisit meta tag ஆனது 1990 -களில் வட அமெரிக்காவில் இருந்த search engine -களுக்காக பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால் இப்பொழுது செர்ச் என்ஜின்களின் crawlers தானாகவே content -களை index செயகிறது. குறிப்பாக Google இந்த வசதியை கொண்டிப்பதனால் இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் வேகமாக index செய்வதற்கு இது உதவுகின்றது.
How to Create Meta Tags for Blogger SEO | மெட்டா டேக்சை எப்படி உருவாக்குவது?
இது HTML Coding தெரிந்தவர்களால் எளிதில் create செய்ய முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது மிகவும் கடினமான ஒன்றுதான். அதனால் தான் எல்லோராலெயும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் நமது ப்ளோகில் SEO Meta Tag Generator Tool என்ற கருவியை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி மிக சுலபமான முறையில் Single Click மூலமாக SEO Meta Tag create செய்து உங்கள் Blogger -ல் Add செய்ய முடியும்.
இந்த லிங்கை கிளிக் செய்து SEO Meta Tag -ஐ உருவாக்கவும்.
Meta Tag Generator Tool for Blogger
கீழே அளிக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி உங்களுடைய blogger -க்கான meta tags -ஐ create செய்யுங்கள்.
1. மேல் காண்பித்திருக்கும் படத்தில் உள்ளது போன்று உங்களது blogger -னுடைய Title, Author, Description, Keywords, Distribution, மற்றும் Robots ஆகியவற்றை பதிவு செய்யவும். அதன் பிறகு Create Meta Tags என்ற Button -ஐ அழுத்தவும். இப்போது Say OK to Confirm என்ற dialogue box -ல் உள்ள OK பட்டனை கிளிக் செய்யவும்.
2. இப்பொழுது Desktop அல்லது Laptop -ன் keyboard -ல் உள்ள Crtl + A என்ற பட்டனை press செய்து select all செய்யவும். அதன் பிறகு Crtl + C அழுத்தி copy செய்யவும்.
How to add meta tags on blogger? | meta tags blogger -ல் add செய்வது எப்படி?
1. முதலில் நமது meta tag generator tool மூலமாக create செய்துள்ள meta tag -ஐ உங்களது Blogger -ல் சேர்க்குவதற்காக Blogger -னுடைய Dashboard -ல் உள்ள Theme என்ற Option -ஐ கிளிக் செய்யவும்.
2. இப்பொழுது Customize என்பதின் அருகில் உள்ள சிறிய Arrow (அம்புக்குறி) கிளிக் செய்யவும்.
3. நம் முன்னால் தென்பட்டுள்ள dialogue box -ல் உள்ள Edit HTML என்ற Option -ஐ கிளிக் செய்யவும். அதன்பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML code ஐ Copy செய்து Desktop அல்லது Laptop -ன் keyboard -ல் Ctrl + F என்ற பட்டனை அழுத்தி அங்கு தென்படும் search box -ல் paste செய்யவும். அதன் பிறகு search button -ஐ அழுத்தவும்.
<b:include data='blog' name='all-head-content'/>
4. இப்பொழுது நமது meta tag generator tool மூலமாக create செய்துள்ள meta tag -ஐ மேல் காண்பித்திருக்கும் படத்தில் உள்ள HTML Code -ற்கு கீழே add செய்யவும். அதன் பிறகு Save Icon -ஐ அழுத்தி Save செய்யவும். நீங்கள் வெற்றிகரமாக meta tag -ஐ create செய்து உங்கள் blogger -ல் பதிவு செய்துள்ளீர்கள்.
Conclusion:
இந்த பதிவானது Meta Tag என்றால் என்ன அது create செய்து Blogger SEO -ல் add செய்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கபெறும், அதை எப்படி மிகவும் எளிய முறையில் நம்முடைய Advanced SEO Meta Tag Generator Tool மூலமாக single click செய்து எப்படி create செய்வது என்று தெரிந்துகொள்ள உதவும். How to Create Meta Tag for Blogger in Tamil என்ற இந்த பதிவானது உங்கள் ப்ளோகில் Meta Tag SEO செய்வதற்கு உதவும்.